நாம் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக சன் டேன் உள்ளது.என்னதான் விலை உயர்ந்த சன்ஸ்க்ரீனை அப்ளை செய்து கொண்டு வெளியில் சென்றாலும் கை,கால் மற்றும் முகத்தின் நிறம் கறுத்துவிடுகிறது.
இந்த TAN பிரச்சனையை ஆண்,பெண் அனைவரும் சந்திக்கின்றனர்.இதை சரி செய்ய வீட்டிலேயே TAN REMOVAL க்ரீம் தயாரித்து பயன்படுத்தலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
1)முல்தானி மெட்டி பவுடர் – இரண்டு தேக்கரண்டி
2)நன்கு புளித்த தயிர் – ஒரு தேக்கரண்டி
3)வாழைபழத் தோல் – ஒன்று
முல்தானி மெட்டி பவுடர் அழகு சாதன பொருட்கள் விற்கும் இடம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்.தங்களின் தேவைக்கேற்ப வாங்கி கொள்ள வேண்டும்.
செய்முறை விளக்கம்:
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு முல்தானி மெட்டி பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் நன்கு புளிக்கவைக்கப்பட்ட தயிர் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முல்தானி பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் உலரவிட வேண்டும்.பிறகு ஒரு வாழைப்பழத் தோலை எடுத்து முகத்தில் வைத்து நன்கு தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள டேன்கள் நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.
இந்த க்ரீமை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பயன்படுத்தலாம்.இந்த நேச்சுரல் க்ரீம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
தேவைப்படும் பொருட்கள்:
1)முல்தானி மெட்டி பவுடர் – ஒரு தேக்கரண்டி
2)சந்தனப் பொடி – ஒரு தேக்கரண்டி
3)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதை முகம் முழுவதும் அப்ளை செய்து கைகளால் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த பேஸ் பேக் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள டேன்கள் நீங்கிவிடும்.