வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!

0
122

வறட்சியான முடி, சுருட்டையான முடியை நேராக்க வீட்டில் உள்ள பொருள் போதும்!

ஒரு சிலருக்கு முடி நீளமாக இருக்கும் ஆனால் வறட்சியாக காணப்படும். அதேபோல் ஒரு சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். இந்த வறட்சியான மற்றும் சுருட்டை முடியை நேராக்கி உங்கள் கூந்தல் பட்டுப் போல மின்னுவதற்க்கு  வீட்டில் உள்ள இந்த பொருட்களை பயன்படுத்தினால் போதும்.

தேவையான பொருட்கள்:

1. சோளமாவு 2 டீஸ்பூன்.

2. தேங்காய்ப் பால் கால் கப்.

3. கெட்டி தயிர் 2 டீஸ்பூன்

4. கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன்.

5. அரிசி மாவு 2 டீஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் சோள மாவை சேர்த்துக் கொள்ளவும். சோளமாவு இல்லாதவர்கள் வடித்த சோற்றை நன்கு மிக்ஸியில் போட்டு கூழாக எடுத்துக் கொள்ளலாம்.

2. அதனுடன் கால் கப் அளவிற்கு தேங்காய் பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.

3. இதனுடன் 2 ஸ்பூன் கெட்டித் தயிரை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

4. கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்கவும். நீங்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம் அல்லது இயற்கை முறையிலேயே வீட்டில் அருகே இருக்கும் கற்றாழையில் ஜெல்லை எடுத்து பயன்படுத்தலாம்.

5. இரண்டு ஸ்பூன் அரிசி மாவை போட்டு கலந்து கொள்ளவும். சோள மாவிற்கு பதிலாக நீங்கள் சோற்றை பயன்படுத்தி இருந்தால் அரிசி மாவு போட வேண்டிய அவசியமில்லை.

6. இதை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

1. இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி வரை நன்கு தேய்த்து விடவும்.

2. அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

3. பின் மைல்டான ஷாம்பு அல்லது கண்டீஷனர் கொண்டு தலையை அலசி விடவும்.

இதை நீங்கள் ஒரு முறை செய்தாலே உங்கள் கூந்தல் பட்டுப்போல மாறுவதை நீங்கள் காணலாம்.மேலும் அதிகமாக சுருட்டை முடி இருப்பவர்கள் வாரத்தில் 2 முறை இந்த முறையை பயன்படுத்தி தலைக்குக் குளித்து வந்தால் முடி பட்டுப் போல் மாறி மற்றும் முடியை நேராக்கியது போல இருக்கும்.