Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சகல விதமான நோயையும் குணப்படுத்தும் தேன் நெல்லிக்காய்! எப்படி செய்யலாம்?

honey amla in tamil

honey amla in tamil

நெல்லிக்காயில் அதிக அளவு விட்டமின் சி சத்துக்கள் இருப்பதால் அது கண்களுக்கு பயன்படுகிறது மேலும் முகப்பொலிவுக்கு பயன்படுகிறது மேலும் சரும வளர்ச்சிக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றது. அதேபோல் சகலவித அனைத்து நோய்களுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் ஆக பயன்படுகின்றது நெல்லிக்காய் இப்பொழுது தேன் நெல்லிக்காயை எப்படி வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பெரிய நெல்லிக்காய்

2. கற்கண்டு

3. நாட்டு சர்க்கரை

செய்முறை:

1. முதலில் பெரிய நெல்லிக்காயை எடுத்து கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து முக்கால் பங்கு வேக வையுங்கள்.

3. இப்பொழுது கற்கண்டை ஒரு 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதை உடலில் போட்டு நன்றாக சர்க்கரை பொடி செய்து கொள்ளுங்கள்.

4. அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் அரைத்து வைத்த கற்கண்டு பொடியை சேர்த்து பின் தயாரித்து வைத்திருந்த நாட்டு சர்க்கரை போடவும்.

5. பின் இதில் வேக வைத்திருந்தால் நெல்லிக்காய் அனைத்தையும் போட்டு அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைக்கவும்.

6. அப்படியே மிதமான சிம்மில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். நாட்டுச் சர்க்கரை மற்றும் சர்க்கரை உருகி வரும். இப்பொழுது அந்த நெல்லிக்காயை எதுவும் செய்யக்கூடாது அந்த இனிப்பு சுவை அப்படியே கொதித்து உள்ளே இறங்கும்.

7. பாகு கம்பி பதத்திற்கு வந்ததும் அதை எடுத்து கண்ணாடி பாட்டில்களை செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது நெல்லிக்காய் அனைத்தையும் போட்டு நன்றாக செய்து வைத்து பயன்படுத்தினார்.

Exit mobile version