Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல் 

மலையாள நடிகையான ஹனிரோஸ்,  இவர், இயக்குனர் வினயன் இயக்கிய ‘பாய் பிரண்ட்’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒன் பை டூ” படத்தின் மூலம் இவர் அதிகம் கவனம் பெற்றார்.  அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம்.

இந்த முத்தக்காட்சி இப்போதுதான் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. 

இது பற்றி சமீபத்தில் நடிகை ஹனிரோஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இப்படியொரு லிப் லாக் காட்சி பற்றி படத்தின் இயக்குனர் சொல்லவில்லை. கதைப்படி என் கேரக்டரை விரும்பிய ஒருவர், இறந்து விடுகிறார். 

பிறகு திடீரென்று என் முன் தோன்றினால், என்ன நடக்கும் என்பதுதான் காட்சி,.அதற்கு முத்தக்காட்சி தான் சரியாக இருக்கும் என்று டைரக்டர் கருத்து தெரிவித்ததால், நான் அதை செய்வது தவறில்லை என்று கருதினேன்.

ஆனால் இப்பொழுது விளம்பரதாரர்கள் அந்தக்காட்சியை பயன்படுத்தி, எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.இப்ப யோசிக்கிறேன் அதை ஏண்டா செஞ்சேன்னு. இனி இப்படி ஒரு காட்சிக்கு நடிக்கும் பொழுது ஒன்றுக்கு பலமுறை யோசித்தே செய்வேன் என்று கூறினார்.

 

Exit mobile version