Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

பெண்கள் பலர் பளபளப்பாகவும் நன்றாக கலராக வேண்டும் என்று பியூட்டி பார்லரை நாடி செல்கின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பொருள்கள் தான் முக அழகு சாதனமாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுதுதான் அது மாற்றம் அடைந்து அனைவரும் பியூட்டி பார்லர் சென்றாக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. முன்பு உபயோகம் செய்த ஒன்றான அழகு சாதனத்தை நாம் அனைவரும் மறந்து விட்டோம்.

இந்த ஒரு பொருள்தான் அக்கால பெண்களின் பளபளப்பிற்கும், கலருக்கும் காரணம்.நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் உளுத்தம் பருப்பு தான். உளுத்தம் பருப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சுத்தமான தேனை கலந்து கொள்ள வேண்டும். இதனை தினந்தோறும் முகம் மற்றும் கைகளில் பூசி வர நல்ல மாற்றத்தை காண முடியும். உளுத்தம் பருப்பு நமது தோலில் உள்ள மெனலின் பிக்மெடேஷனை குறைத்து ப்ளீசிங் அஜெண்டை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

Exit mobile version