பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்!
ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா தொற்றின் பாதிப்பால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டது.கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஆசிரியர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவதை தடை செய்திருந்தனர்.இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பல முறைகேடுகள் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக இருப்பது தான் தற்பொழுது யுனிவர்சிட்டியில் நடந்திருப்பது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஜவர்கலால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது.தற்பொழுது கொரோனா தொற்று காலம் என்பதால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்கள் ,மாணவர்கள் யாரும் வருகை புரிவது இல்லை.இதனை பயன்படுத்திக் கொண்டு பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை தேனிலவுக்காக வாடகை விட்டு வந்துள்ளார்.இந்த மாளிகை ஆனது விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால் தற்பொழுது யாரும் வராத காரணத்தினால் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் கடந்த 18, 19 தேதிகளில் தேனிலவுக்காக வாடகை விட்டுள்ளார்.
இரண்டு நாட்களும் அறையை நன்றாக அலங்கரித்து அவர்களுக்கு கொடுத்துள்ளனர்.இருநாட்கள் கழித்து மூன்றாவது நாள் அந்த அறையே சென்ற பார்த்தவர்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. ஏனென்றால் அங்கு அலங்கரிக்கப்பட்ட பூக்கள் போன்றவை கண்டு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து அப்பொழுதே மேலிடத்தில் புகார் அளித்தனர்.மேலும் அங்குள்ள அலங்காரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு அது பெரும் வைரல் ஆகியது.இதனைப் பற்றி தீவிரமாக விசாரித்த பல்கலைகழகம் ,5 நபர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று தேனிலவுக்காக வாடகை கொடுத்து பல்கலைக்கழகத்தை கலங்க படுத்தியது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த வருத்தத்திற்குரிய செயலாக உள்ளது.மேலும் அந்த ஐந்து பேர் கொண்ட குழு விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.