Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி…

மதுரை,மையிட்டான்பட்டி விளக்கு பகுதியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லாரி டிரைவர் ஒருவருடன் சேர்த்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

மதுரை மாவட்டம், நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34) கன்டெய்னர் லாரி ஓட்டுநரான பணிபுரிந்து வருகிறார்.இவர் கன்டெய்னர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி,மையிட்டான்பட்டி விளக்கு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜேம்ஸ் மார்ட்டின், கமலநேசன் மற்றும் சாம் டேவிட்சன் ஆகியோர் பயணம் செய்து வந்துள்ளனர். சரியாக அவர்களது கார் கள்ளிப்பட்டி அருகே மையிட்டான்பட்டி விளக்கு நான்கு வழிச்சாலையில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதி
எதிர் திசையில் வந்த மினி கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.மேலும் இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் காரில் பயணித்த ஜேம்ஸ் மார்ட்டின்,கமலநேசன் மற்றும் சாம் டேவிட்சன் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த கள்ளிக்குடி காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த உயிரிழந்த 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். இந்நிலையில் இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கள்ளிக்குடி காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version