உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கனுமா? ஜலதோசம் மூக்கடைப்பு குணமாகனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!

0
112

சிறுதானிய வகைகளில் மிகப் பரிச்சயமான ஒன்றுதான் கொள்ளு. இது உடலில் இருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. அதனால்தான் இதை குதிரைகளுக்கு உணவாக கொடுப்பார்கள். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடுவதற்கு அதிக சக்தி வேண்டும். அந்த சக்தியை கொள்ளு சாப்பிடுவதன் மூலம் குதிரைகளுக்கு கிடைக்கிறது.

“இளைத்தவன் எள்ளு விதைப்பான்; கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்” என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு ஏற்ப கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைத்து உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கும்.
சிலர் உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சிப்பார்கள். ஆனால் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இந்தக் கொள்ளு பருப்பை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் உடலில் உள்ள கொழுப்பு தானாகவே கறைந்துவிடும்.

புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. மேலும், மருத்துவ குணம் நிறைந்த கொள்ளு பருப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வகை அனைவரும் உண்ணலாம்.

கொள்ளு சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்:

*கொள்ளு பருப்பை இரவில் ஊறவைத்து அந்த நீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்தால் அது உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றும்.

*இதை தண்ணீருடன் கொதிக்கவைத்து, அந்த நீரை குடித்தாள் ஜலதோஷம் குணமாகும்.

*இது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தும். மேலும் மாதவிடாய் ஒழுங்கை சீர்படுத்தும்.

*கண் நோய்கள், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றையும் கொள்ளு நீர் சரி செய்யும்.

*கொள்ளு ரசம் சாப்பிடுவதனால் சளி, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து சீக்கிரமாக குணமடையலாம்.

*கடினமான பணிகளை செய்பவர்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.