Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்!

Hospital carelessness! Woe to the woman who died!

Hospital carelessness! Woe to the woman who died!

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்!

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்ன களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப். இவரது மனைவி வனிதா. 30 வயதான பிரதீப் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி  இருபத்தி ஆறு வயதான நிறைமாத கர்ப்பிணி. இவரை கடந்த 22ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி அங்கேயே வனிதா மூன்று நாட்கள் தங்கினார். இந்த நிலையில் பணியில் இருந்த நர்ஸ் மணிமாலா,  வனிதாவுக்கு தவறான ஊசி ஒன்றை போட்டதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து ஊசி செலுத்தி கொண்ட சில மணி நேரங்களிலேயே வனிதா மாரடைப்பு காரணமாக சுயநினைவை இழந்துவிட்டார். இதை அறிந்த டாக்டர்கள் வனிதாவை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா நேற்று பரிதாபமாக இறந்து போனார். இதைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் வாங்காமல் மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் கவனக்குறைவே வனிதாவின் இறப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் டாக்டர் மற்றும் நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பர் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ் மற்றும் நர்ஸ் மணிமாலா இருவரும் கவனக்குறைவாக செயல்பட்டதால் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version