Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்!முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை!!

10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்!முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை!!

 

நேற்று அதாவது ஜூலை 2ம் தேதி தமிழகத்தில் 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று அறிவிக்கபப்ட்டு பிரியாணி வழங்கப்பட்டது.

 

தமிழகத்தில் உள்ள  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த 10 ரூபாய் பிரியாணி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பழனியில் புதிதாக திறக்கப்பட்ட தக்வா என்ற ஹோட்டலில் இந்த 10 ரூபாய் பிரியாணி ஆஃபர் அறிவிக்கப்பட்டது.

 

முதலில் வரும் 300 நபர்களுக்கு மட்டுமே 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று ஹோட்டல் அறிவித்தது. இந்த அறிவிப்பால் பிரியாணியை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்தது. மக்கள கூட்டம் அதிகரித்ததால் 10 ரூபாய்க்கு வழங்கப்படட பிரியாணி அனைத்தும் விரைவாக விற்று தீர்ந்தது.

 

உலக பிரியாணி தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் ஆஃபரை தக்வா ஹோட்டல் அறிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை உலக பிரியாணி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 2ம் தேதியான நேற்று ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் உலக பிரியாணி தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

 

10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கியது போலவே திருப்பதியில் உள்ள ஹோட்டல் ஒன்று சென்ற மாதம் 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கியது. கூட்டம் அதிகரித்ததால் காவல் துறையினர் ஹோட்டலை மூடியது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version