Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்!!

#image_title

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்!

தான் வளர்த்த நாய்க்கு அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் 16.5 லட்சம் ரூபாயில் வீடுகட்டி பரிசளித்த சம்பவம் இணையத்தில் அனைவரின் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியம் கொணீட இவர் பேக்கர் என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நாய் இறந்து போக மீண்டும் சார்லி என்ற நாயை வாங்கி வளர்த்தி வந்தார். இந்த நிலையில் தான்.வளர்த்த சார்லி நாய்க்கு முதல் பிறந்தநாள் வந்தது. அதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்த யூடியூபர் ப்ரெண்ட் ரிவோரா நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். பிறகு நாய்க்கு வீடு கட்டி கொடுக்கலாம் என்று நினைத்த ரிவோரா தான் இருக்கும் வீட்டின் அருகே சார்லி நாய்க்கு வீடு கட்ட தொடங்கினார்.

யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா சார்லிக்காக கட்டிய வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் தொலைக்காட்சி, ஃசோபா, மெத்தை, தலையணைகள்,  குளிர்சாதனப்பெட்டி(Fridge) என அனைத்து பொருள்களையும் வைத்துள்ளார். வீட்டுக்கு வெளியே சார்லி வீடு என்ற பெயர் பலகையும் வைத்துள்ளார். யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா மற்றும் சார்லி இருவரும் வீட்டினுள் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Exit mobile version