Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடையில் குவியும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை அதிரடி குறைவு!

Housewives flocking to the store! The price of gold is very low!

Housewives flocking to the store! The price of gold is very low!

கடையில் குவியும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை அதிரடி குறைவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்த போதிலும் மக்கள் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்தனர். அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்தது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பினார்கள். அதனால் தங்கம் ஏற்ற இறக்கத்துடன் காணபட்டது.

கடந்த தினங்களில் பண்டிகை நாட்கள் வந்ததின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத அளவு உச்சம் பெற்றது. மேலும் சற்று குறைய தொடங்கியது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து விற்பனையானது. மேலும் ஒரு கிராம் 5280 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்று காலை நிலவரத்தின் படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 5,250 ரூபாய்கும்  விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து ரூ 42,000 க்கு விற்பனையாகின்றது.

Exit mobile version