Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Voter ID card வீட்டிலிருந்தபடியே சரி செய்வது எப்படி?

ஆதார் கார்டு, பான் கார்டு போன்று மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக (Voter ID card) ஐடி கார்டு உள்ளது.இதில் சில தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதனை வீட்டில் இருந்தே மாற்ற இந்த கொரோனா ஊரடங்கு உதவுகிறது.யார் வேண்டுமானாலும் பெயர் முகவரி அல்லது புகைப்படத்தை வீட்டிலிருந்தே சரி செய்து கொள்ள தற்பொழுது இணையதள வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு மட்டுமில்லாமல் நம் பொது பயன்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, அதனை சரிசெய்து கொள்வது மிக அவசியமாக உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையை சரி செய்வதற்கு முதலில் தேசிய வாக்காளர் சேவை இணைய தளமான www.nvsp.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.சென்ற பிறகு உங்களது தேவையான பிரிவுகளுக்குள் செல்ல வேண்டும். பெயர் அல்லது முகவரி உள்ள தவறுகளை சரி செய்ய விரும்பினால், ஆன்லைன் படிவம் 8-டை நிரப்ப வேண்டும்.பெயர் மற்றும் முகவரியை மாற்ற மட்டுமே வடிவம் 8-டினை நிரப்ப வேண்டும்.
பெயர் மற்றும் முகவரி மாற்றங்களுக்கு சரியான ஆவணங்களான ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், ஓட்டுனர் உரிமம் ,பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் பதிவேற்ற வேண்டும்.படிவத்தை சமர்ப்பித்த பிறகு ஒரு குறிப்பு (reference number) எண் உங்களுக்கு அளிக்கப்படும். அதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை பற்றி உங்களால் தெரிந்து கொள்ள இயலும்.

வாக்காளர் அடையாள அட்டையில் புகைபடத்தை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் ஹோட்டலில் (Portal) நுழைந்து நுழைந்து பர்சனல் டீடெய்ல்ஸ்(personal details) என்ற டேபை(tab) கிளிக் செய்யவும்.புகைப்பட திருத்தத்திற்கான ஆப்ஷன்(option) அங்கு காணப்படும். அங்கே உங்கள் புதிய புகைப்படத்தை பதிவேற்றி கொள்ளலாம்.இதற்கான கால அவகாசம் ஒரு மாதத்திற்கு ஆகும்.

Exit mobile version