தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 69வது பிறந்த நாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சியினரால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஆனால் இதற்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய பிறந்த நாள் விழாவை எந்த விதமான ஆடம்பரமுமில்லாமல் மிகவும் எளிமையாக கொண்டாடுங்கள். ஏழை, எளிய, மக்களுக்கு உதவி புரியுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
அதோடு நேற்று சென்னையில் ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நான் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது இன்று எனக்கு மிகவும் மகத்தான நாள் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் என்னுடைய பிறந்தநாள் காரணமாகத்தான் இது மகத்தான நாளாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல இந்த நான் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதன் மூலமாகத்தான் இந்த நாள் எனக்கு மிகவும் மகத்தான நாளாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார்.
அதன்பிறகு அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் பள்ளி இல்ல தலைவி நிர்மலா முதல்வர்கள் பெர்வின் ஜெயசிந்தா, ரோஸ்லின் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றார்கள் என தெரிகிறது.
விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு களித்திருக்கிறார். அதன் பிறகு பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக 5 லட்சத்துக்கான காசோலையை பள்ளி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் யார் என்னை வாழ்த்தினாலும் உங்களுடைய வாழ்த்துக்கு நிச்சயம் அது ஈடாகாது ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் அன்று இங்கு வரும்போது எனக்கு எத்தனை வயது என்பதை சொல்வது வழக்கம்.
அதனடிப்படையில் இந்த வருடம் எனக்கு வயது 69 இதை சொன்னால் சிலர் நம்பமாட்டார்கள் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே 39 வயது தான் இருக்கும் என்று தெரிவிப்பார்கள்.
அதற்கு நான் என்னுடைய உடல் நலத்தை, உணவு பழக்கத்தை, உடற்பயிற்சியை, முறையாக செய்து வருவது தான் காரணம் என தான் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவை இருந்தாலும், உங்களை சந்திக்கும் போது 5 வயது குறைந்து விடுகிறது. நீங்கள்தான் முதலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.