Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசின் அதிகாரத்தை நீதிமன்றம் எப்படி கையிலெடுக்க முடியும்? மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்த அதிரடி கருத்து!

திருச்சி காவிரி- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது போன்ற பொதுநல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்தால் அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொண்டதை போலாகிவிடும் என ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறது.

காவேரி கொள்ளிடம் ஆறுகள் திருச்சி முக்கொம்புவில் பிரிந்து கல்லணையில் ஒன்றிணைகின்றன. இடையில் முக்கொம்பு முதல் கல்லணை வரையில் தீவு பகுதியாக இருக்கிறது கம்பரசன் பேட்டை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ளது உத்தமர் சீலையிலிருந்து காவிரியின் குறுக்கே வெங்கூருக்கும் கிளி கூடுவிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இடையாற்று மங்கலத்திற்கும் தடுப்பணைகள் அமைந்திருப்பதால் விவசாயம் குடிநீருக்கு உதவும் நீர் வளத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்டவற்றுக்கு மனு அனுப்பினோம். தடுப்பணைகள் அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்ரீரங்கம் உத்தமர்சீலி விஜயகுமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி பி என் பிரகாஷ் ஆர் ஹேமலதா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வது சாதித்து வந்தது கிளிக்கோடு காவிரியின் இடது கரை கொள்ளிடத்தில் வலது கரைக்கு இடைப்பட்ட பகுதியில் கல்லணைக்கு மேற்புறம் அமைந்திருக்கிறது. கல்லணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலமாக கிளிக்கூடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிணறுகள், செறிவூட்டப்படும் நாட்டு வாய்க்கால் மூலமாக பாசன வசதி பெறுகிறது.

 இடையாற்று மங்கலம் கொள்ளிடத்தில் இடது கரையில் அமைந்திருக்கிறது. இதன் மூலமாக ஐயன் வாய்க்கால் செல்வதால் பாசன வசதி பெறுகிறது தடுப்பணைகள் அமைக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று நீர்வளத்துறை பொறியாளர் தெரிவித்திருக்கிறார் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தடுப்பணைகள் அமைக்க வேண்டிய அவசியம் எதுவும் எழவில்லை என்று பொறியாளர் அறிக்கையை வழங்கியிருக்கிறார். இதில் நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் இருப்பதாக கருத இயலாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட இயலாது.

இத்தகைய பொதுநல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்தால் அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் கையிலெடுத்துக்கொண்டது போலாகிவிடும் என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.

Exit mobile version