Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

260 கோடியா? எப்படி வந்தது இந்த பணம்!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து டிவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ஒரு விவாதம் நடத்தி இருக்கிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி தேர்தலில் செலவு செய்த தொகை உட்பட பலவற்றைப் பற்றி உரையாடினர். ஒரு நெருங்கிய சர்க்கிள் தான் என இதில் எஸ் வி சேகர் பேசியது லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

எஸ் வி சேகர் தன்னுடைய உரையாடலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலில் வெற்றி அடைந்தவர்களுக்கு தோல்வி அடைந்தவர்களுக்கும் கட்சி முறையாக கணக்கு கொடுத்து இருக்கிறார்கள்? கொடுக்க வேண்டும் இல்லையா எனவும், அவர் கேள்வி எழுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் வரையில் செலவு செய்யலாம் அதற்கு மேல் செலவு செய்தால் அது தேர்தல் விதி மீறல் என்று சொல்லப்படும். இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாக எஸ் வி சேகர் தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

ஒரு தொகுதிக்கு 13 கோடி ரூபாய் என்று 20 தொகுதிகளுக்கும் 260 கோடி செலவு செய்ததாக பாரதிய ஜனதா கட்சி அந்த கட்சியின் பிரமுகர் எஸ் வி சேகர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறது என தெரிவித்திருக்கிறார் மார்சிஸ்ட் பிரமுகர் அருணன். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 260 கோடி கருப்புப் பணத்தை செலவிட்டு இருக்கிறதா? அதேபோல ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட தொகுதிகள் கணக்கில் வைத்தால் எத்தனை நூறு கோடிகள் செலவிடப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

Exit mobile version