கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க!

0
150

கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க!

கொத்தவரங்காய் ஒவ்வொருவர் விரும்பி உண்பார்கள. கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது.

மேலும் கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குறைக்கிறது.அதனால் இதை கட்டாயமாக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.மேலும்

கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு கொத்தவரங்காய்க்கு உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கு ஏற்படும். இது இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது.

கொத்தாரவங்காயில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போடை,ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

மேலும் கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது

சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றது. மேலும் இதனால் பெண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை தடுக்க உதவுகிறது.