ஆரம்பத்தில் திமுகவில் இருந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அந்த கட்சியில் இணைந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு அந்த கட்சியில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.இதனால் வருத்தமடைந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தார்.
அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்த சமயத்திலேயே அவருக்கு மேல் இடத்திலும் சரி, சாதாரண நிர்வாகிகளிடமும் சரி ,சரியான மரியாதை இல்லை என்று முறையிட்டு இருந்தார் .ஆனால் டெல்லி மேலிடம் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மிகுந்த வருத்தத்திற்கு ஆளான குஷ்பூ ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நடிகை குஷ்பு சமீபத்தில் திடீரென்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது பாஜகவில் இணைந்த கையோடு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் நடிகை குஷ்பூ.
தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் திருமாவளவன் தொடர்பாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதோடு சனாதனம் தொடர்பாக பல கருத்துக்களையும் தெரிவித்தார். இதனால் அவருக்கான ஆதரவும் எதிர்ப்பும் தமிழகத்தில் மிக அதிகமாக இருந்தது. அதோடு தமிழகத்திலே சில காலம் வரையில் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை குஷ்பு என்று சொன்னால் அது மிகையாகாது.அதோடு பாஜகவில் நடிகை குஷ்பு இருப்பதாலும் அவருக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாலும் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அவர் பாஜக சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்கின்ற அளவிற்கு நடிகை குஷ்பூ பாஜகவில் வளர்ந்து நின்றார்.
அதோடு சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நடிகை குஷ்பு இதனையடுத்து அங்கு தீவிரமாக பணியாற்ற தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடிகை குஷ்புவுக்கு போட்டியாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனையடுத்து நடிகை குஷ்பூ நிச்சயமாக இந்த தொகுதியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று வீராவேசமாக பேசினார்.
இந்த நிலையில், சமீபத்தில் சட்டசபை தேர்வுகளுக்கான பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் நடிகை குஷ்புவுக்கு முதலில் இடம் அளிக்கப்படவில்லை அதிலும் அவர் பெரிதும் எதிர்பார்த்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி அதிமுக இடம் சென்று விட்டது. இதனால் நடிகை குஷ்பு வருத்தம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாஜகவின் மேலிடத் தலைவர்களிடம் பேசி அவர்களை சரிக்கட்டும் வழியில் இறங்கினார் நடிகை குஷ்பு. டெல்லியில் மேலிட உத்தரவின்படி ஒரு வழியாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவிற்கு பாஜக சார்பில் ஒதுக்கப்பட்டது.இதனால் அவர் மிகப்பெரிய மதிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதோடு நிச்சயமாக நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.