காலை நேரத்தில் காபி,டீ போன்ற பானங்களை ருசி பார்த்த பின்னரே பலரின் பொழுது விடுகிறது.காலை நேரம் மட்டுமின்றி சிலர் மதியம்,மாலை,இரவு என்று ஒருநாளைக்கு 5 முதல் 10 முறை டீ,காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.மதுவிற்கு அடிமையானால் என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படுமோ அதேபோல் தான் டீ,காபி அதிகமான குடிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
தேயிலை தூள்,சர்க்கரை,பால் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் டீ உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் என்று பலர் நம்புகின்றனர்.ஆனால் டீ,காபி போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தான பானம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சிலர் டீ,காபிக்கு பதில் கருப்பு டீ குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.
அதாவது தேயிலை தூள்,சர்க்கரை,தண்ணீர் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் டீயை பலரும் விரும்பி அருந்துகின்றனர்.சிலர் இந்த பிளாக் டீயில் கொத்தமல்லி,இஞ்சி அல்லது சுக்கு,ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து பருகுகின்றனர்.பால் டீ,காபியை ஒப்பிடும் பொழுது பிளாக் டீ உடலுக்கு அவ்வளவாக கெடுதல் தருவதில்லை.சர்க்கரை சேர்க்கப்படாத பிளாக் டீ பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
அதேபோல் இரத்த அழுத்த பாதிப்பை தடுக்க பிளாக் டீ உதவுகிறது.காஃபின் குறைந்த பானமான பிளாக் டீ மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.சுவாசப் பிரச்சனையை முற்றிலும் சரி செய்ய உதவுகிறது.மன அழுத்தத்தை குறைக்க பிளாக் டீ பருகலாம்.தலைவலி பிரச்சனையை போக்க பிளாக் டீ செய்து குடிக்கலாம்.
நன்மைகள் நிறைந்து காணப்படும் இந்த பிளாக் டீயை அளவு கடந்து பருகினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.நாள் ஒன்றில் ஒன்று அல்லது இரண்டு பிளாக் டீ மட்டுமே குடிக்க வேண்டும்.இந்த அளவை தாண்டி பருகும் பொழுது உடல் ஆரோக்கியம் மோசமாகும்.
அதிகளவு பிளாக் டீ குடிப்பதால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.குறிப்பாக இரவு நேரத்தில் பிளாக் டீ பருகினால் உறங்க முடியாத நிலை ஏற்படும்.காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பிளாக் டீ செய்து குடித்தால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.