ஒரு வீட்டிற்கு எத்தனை வாசப்படி இருந்தால் நல்லது? இந்த திசையில் அமைத்தால் பணம் கொட்டும்!!

0
544
How many doors are good for a house? If set in this direction money will pour!!

உங்களில் பெரும்பாலானோருக்கு சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும்.சிலர் தற்பொழுது சொந்த வீட்டு கனவை நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள்.வீடு கட்டும் எண்ணத்தில் இருப்பவர்கள் மட்டும் வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்ட வேண்டியது மிக முக்கியமான ஒன்று.வீட்டு வாசல்,பூஜை அறை,சமையலறை,படுக்கை அறை,கழிவறை போன்றவற்றை வாஸ்து சாஸ்திரப்படி கட்டினால் வாழ்வில் முன்னேற்றம்,குடும்ப ஒற்றுமை போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும்.வாஸ்துப்படி அமையாத வீட்டில் தடங்கள் மற்றும் எதிர்மறை விஷயங்களே அதிகம் நிகழும்.

அதேபோல் வீட்டில் எத்தனை வாசல் அமைக்க வேண்டும்.எந்த திசையில் அமைக்க வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் மூன்று வாசப்படி இருக்கலாம்.வீட்டில் எத்தனை வாசல் அமைத்தாலும் தலைவாசல் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

தலைவாசலை தென் கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்கக் கூடாது.இதனால் குடும்பத்தில் பிரச்சனை மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.வீட்டில் இரண்டு வாசல் வைக்க விரும்பினால் கிழக்கு மற்றும் தெற்கில் அமைப்பது நல்லது.

மேற்கு திசையில் வாசல் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.வடக்கு திசை பார்த்தவாறு உள்ள கட்டிடத்திற்கு வடக்கு மற்றும் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.கிழக்கு திசை பார்த்தவாறு உள்ள கட்டிடத்திற்கு கிழக்கு மற்றும் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.மேற்கு திசை பார்த்தவாறு உள்ள கட்டிடத்திற்கு மேற்கு மற்றும் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.