எந்த வயதுடையவர்கள் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்:?அறிவியல் பூர்வமான விளக்கம்!

0
133

ஒரு கோழி முட்டையில் அளவுக்கு அதிகமான விட்டமின்கள், கலோரிகள்,மினரல்கள், கொலஸ்ட்ரால்
போன்ற சத்துகள் உள்ளன.இவ்வளவு அந்த அளவுக்கு அதிகமான சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி நம் உடலுக்கு அவரவர்களின் வேலையைப் பொறுத்தே அமையும்.

எந்த வேலை செய்பவர்கள் வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

1.அதிகமாக உடற்பயிற்சி உடன் வேலை செய்பவர்கள் அதாவது உடலை வளைத்து வேலை செய்பவர்கள் வாரத்திற்கு 6 அல்லது 7 முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம்.

2.கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலைகள் அதாவது உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை பார்ப்பவர்கள் வாரத்திற்கு 5 முட்டைகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 3 முட்டைகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

4.குழந்தைகளைப் பொறுத்தமட்டில் நன்றாக ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளுக்கு தாராளமாக நாளுக்கு ஒரு முட்டை என்ற விதத்தில் வாரத்திற்கு ஏழு முட்டை கொடுக்கலாம்.

5.தற்போது வீடியோ கேம் மோகத்தால் பல குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதாவது வாரத்திற்கு மூன்று முட்டைகள் மட்டுமே தரவேண்டும்.

6.எக்காரணத்தை கொண்டும் முட்டையை பச்சையாக உட்கொள்ளக் கூடாது.அதில் உள்ள அளவுக்கு அதிகமான சத்துக்களை, உட்கிரைக்கும் சக்தி நம் உடலிருக்கை கிடையாது.