பிரேசிலில் இத்தனை லட்சம் பேர் பலியாகியுள்ளனரா?

0
86
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.78-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40.91 லட்சத்தைக் கடந்துள்ளது.