Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குக்கர் சாதம் எத்தனை நிமிடங்கள் வேக வேண்டும்? அரிசியின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க இப்படி பண்ணுங்க!!

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் நவீன சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.முன்பு விறகு,மண்ணெண்ணெய் அடுப்புகளில் சமைக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது கரண்ட் அடுப்பு,கேஸ் அடுப்பு போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

அதேபோல் சமையல் செய்ய தற்பொழுது வகை வகையான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக சாதம் செய்ய குக்கர்,எலக்ட்ரிக் குக்கர் மட்டுமே பயன்படுபட்டு வருகிறது.குக்கரில் சமைப்பதால் நேரம் சேமிக்கப்படுவதோடு சமையலும் சுலமபாக செய்ய முடிகிறது.குக்கரில் ஊறவைத்த அரிசி மற்றும் அதற்கு ஏற்ற தண்ணீரை ஊற்றி விசில் விட்டால் சாதம் ரெடி.

இன்றைய அவசர உலகில் இதுபோன்ற சமையல் பாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.குக்கரில் சமைப்பதால் எரிவாயு செலவு மீதமாகிறது.நேரம்,பணம் சேமிக்க மற்றும் சமையல் சுலபமாக நடக்க சிறந்த சாய்ஸாக குக்கர் இருக்கிறது.

குக்கரில் சமைக்கும் முன் அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்திருக்க வேண்டும்.முதலில் அரிசியை 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.பிறகு ஒன்று அல்லது இரண்டு முறை அரிசியை கழுவினால் போதும்.அதற்கு மேல் அரிசியை கழுவினால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.அரிசி ஊறவைத்த தண்ணீரை கொண்டு சாதம் சமைத்தால் அதில் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் இருக்கும்.

அரிசியில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது.பாலிஷ் செய்யப்படாத அரிசியில் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாலிஷ் செய்யப்பட்ட அரிசி செரிமானப் பிரச்சனை,சர்க்கரை நோய்,இதய நோய் உடல் பருமன் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

குக்கரில் சமைப்பது எப்படி?

முதலில் குக்கரில் ஊறவைத்த அரிசியை போட்டு அதற்கு ஏற்ற தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

குக்கரில் சமைக்கும் உணவுகளை 7 நிமிடங்கள் வரை மட்டுமே வேக விட வேண்டும்.அதற்கு மேல் வெந்தால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நீங்கி ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்.

Exit mobile version