இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

0
125

ஆன்லைன் வகுப்பால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை. நடந்தது என்ன?

கடலூரில் உள்ள பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்பு எடுத்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் வாங்கி தராததால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

பண்ருட்டியில் உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் விக்னேஷ்.விக்னேஷ் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்தப் பள்ளியில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதால் தனக்கு வசதி மிகுந்த செல்போனை வாங்கி தருமாறு தந்தையிடம் விக்னேஷ் கேட்டுள்ளார்.

அதற்கு விஜயகுமார் தன்னிடம் இப்பொழுது பணம் இல்லை என்பதாகவும் முந்திரிக் கொட்டைகளை விற்று உனக்கு செல்போன் வாங்கித் தருகிறேன் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளை பயில முடியாத விக்னேஷ் மனமுடைந்து தனது தாயாரின் சேலையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த காடும் புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கில் உலகமே தத்தளித்து வரும் நிலையில் அடித்தட்டு மக்களின் நிலை கல்விக்காக செல்போன் கூட வாங்க முடியாத நிலையில் தள்ளியுள்ளது. இந்த கொரோனாவால் ஏற்படும் பிரச்சனையானது அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் ஆகவே உள்ளது. ஏழை எளிய, அடித்தட்டு மாணவர்கள் குறித்தும் கல்வித்துறை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.