ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

0
129
#image_title

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக தேநீர் இருக்கிறது.இதில் பாரம்பரிய தேநீர் மற்றும் மூலிகை தேநீர் என இரண்டு வகை இருக்கிறது.இந்த தேநீரை அருந்துவதால் நம் உடலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.அதே சமயம் அதிகளவு தேநீர் தீமைகளுக்கும் வழி வகுக்கும்.

தேநீர் அளவோடு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:

1.ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் அளவு தேநீர் அருந்தலாம்.இந்த தேநீரில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இவை நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் மாசுபாட்டிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.

2. தினமும் கிரீன் டீ பருகினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்ப முடியும்.இவை நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் எல்டிஎல் அளவை குறைகிறது.

3.தினமும் கிரீன் டீ பருகினால் அவை நமது உடல் எடையை குறைக்கும்.இந்த டீ நம் உடலில் எலும்புகளின் வலிமையை பாதுகாக்கிறது.

4.தேநீர் வாயில் உள்ள pH ஐ மாற்றுகிறது.இதன்மூலம் துர்நாற்றம் தவிர்க்கப்படுவதால்,இன்னும் பிரகாசமாக நம்மால் சிரிக்க முடியும்.

5.தினமும் தேநீர் அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அவை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகப்படியான தேநீர் பருகுவதால் ஏற்படும் தீமைகள்:

1.ஒரு நாளைக்கு 3 அல்லது அதற்கும் அதிகாமாக தேநீர் பருகுவதால் அவை தூக்கமிமைக்கு வழி வகை செய்யும்.

2.வெப்பமான கோடை மாதங்களில் அதிகப்படியான தேநீர் உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

3.தேநீரில் டானின்கள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.அவை இரும்புடன் பிணைக்கப்பட்டு அதன் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. எனவே, அதிகப்படியான தேநீர் நுகர்வு இரும்புச்சத்து குறைபாடு,இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.

4.குறிப்பாக பிளாக் டீ அதிகளவில் பருகினால் காலப்போக்கில் உங்கள் பற்களை கறைபடுத்தும்.

5.அதிகளவு தேநீர் உடலில் செரிமான பாதிப்பை உருவாக்கும் தன்மை கொண்டது.