Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

#image_title

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கினால் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்,மன குழப்பங்கள் தீரும் என்பது ஐதீகம்.சிலர் தங்கள் ஆசைகளை கடவுளிடம் கூறி கோயில் பிரகாரத்தை சுற்றுவார்கள்.

கோயில் பிரகாரத்தை ஒருமுறை அல்லது மூன்று முறை மட்டுமே சுற்றி வழிபட்டு வருகிறோம்.ஆனால் கோயில் பிரகாரத்தை எத்தனை முறை என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து பெருமபாலானோருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

கோயில் பிரகாரத்தை ஒன்று,மூன்று,ஐந்து,ஏழு என்று ஒற்றை இலக்கத்தில் தான் சுற்றி வணங்க வேண்டும்.அதிகப்பட்சம் 208 முறை கோயில் பிரகாரத்தை சுற்றலாம்.

ஒரு முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் இறைவனை அணுக முடியும்.மூன்று முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால்ம் மனச் சுமை குறையும்.ஐந்து முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் இஷ்ட சக்தி கிடைக்கும்.ஏழு முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.ஒன்பது முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் சத்துரு நாசம் ஒழியும்.பதினோரு முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.பதிமூன்று முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் பிரார்த்தனை கைகூடும்.பதினைந்து முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் தன வரவு அதிகரிக்கும்.பதினேழு முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் தானியம் சேரும்.பத்தொன்பது முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் ரோக நிவர்த்தி உண்டாகும்.இருபத்தோரு முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் சிறந்த கல்வி கிடைக்கும்.இருபத்து மூன்று முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் சிறந்த சுக சௌகரியம் உண்டாகும்.நூற்று எட்டு முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் சிறந்த புத்தி பேறு உண்டாகும்.இருநூற்று எட்டு முறை கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தால் அதிருத்திரயாக பலன் கிடைக்கும்.

Exit mobile version