ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?

0
115

ஒரு உபயோகப்படுத்தப்பட்ட ஷு-வின் விலை இத்தனை கோடியா?

மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்னீக்கர் ஷு – கென தனி மரியாதை வைத்துள்ளனர்.இப்பகுதியை சேர்ந்த மக்கள் இதை ஷு வாக பார்க்காமல் ஆடம்பரமானதாகவும், விலைமதிப்பு மிக்க பொருளாகவும் பார்க்கின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் இசைக்கலைஞர் கன்யே வெஸ்ட் 2008 – ல்கிராமி விருது வழங்கும் விழாவில் பாடிய போது ஒரு ஷு வை பயன்படுத்தினார்.அது ஒரு  Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ ஆகும்.இந்த ஷூவை சமீபத்தில் பிரபல ஏல நிறுவனமான சோத்பை நிறுவனம் ஏலத்தில் விட்டது.

இந்த ஷூவை கன்யே வெஸ்ட் மற்றும் மார்க் ஸ்மித் ஆகியோர் இணைந்து நைக் நிறுவனத்திற்காக உருவாக்கிய முதல் சாம்பிள் ஷு என்பதாலும், ராப் பிரபலம் பயன்படுத்திய ஷு என்பதாலும் இதற்கு டிமான்ட் அதிகமாக இருக்கும்.இந்த ஷுக்களை லிமிடெட் எடிசன் ஆக மட்டுமே வெளியிடுவார்கள்.

இந்த ஷு, 12 சைஸிளும், கருப்பு நிற லெதரில் செய்யப்பட்டதும் ஆன Nike Air Yeezy 1 ஸ்னீக்கர் ஷூ ரேர்ஸ் எனும் முதலீட்டு தளத்தில் அதிக ஏல தொகை கோரப்பட்ட நிலையில் அந்த ஷு – வை சுமார் 18 மில்லியன் டாலர் அதாவது இந்திய பண மதிப்பில் இதன் விலை ரூ.13,21,85,340.00 ஆகும்.

இதேபோல் இதற்கு முன் 1985 ம் ஆண்டு  ஏர் ஜோர்டன் ஷூ கடந்த மே மாதம் 2020 ல் சோத்பை நிறுவனத்தினால் 5,60,000 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.அதற்கடுத்து தற்போது Nike AirYeezy 1 ஸ்னீக்கர் ஷூ அதிக விலைக்கு ஏலத்தில் விட்டது குறிப்பிடப்பட்டது.