தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமா? ஜஸ்ட் ஒரு க்ளிக் தான்.. சுலபமாக அப்ளை செய்து விடலாம்!

0
221
How to apply for Learner's License Online in Tamil

தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமா? ஜஸ்ட் ஒரு க்ளிக் தான்.. சுலபமாக அப்ளை செய்து விடலாம்!

தற்காலிக ஓட்டுநர் உரிமம் : Learner’s License

நம் நாட்டில் வாகனம் இயக்கும் அனைவரிடமும் ஓட்டுநர் உரிமம் இருப்பது கட்டாயமாகும்.அந்த வகையில் தற்காலிக ஓட்டுநர் உரிமம்(LLR) பெற மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு (DTO) சென்று நேரத்தை வீணடிக்காமல் வீட்டில் இருந்த படி அப்ளை செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

LLR என்றழைக்கப்படும் தற்காலிக ஓட்டுநர் உரிமம் (லேர்னர் லைசென்ஸ்) பெற  விண்ணப்பதாரர்கள் பரிவஹான் இணையதளத்தில் தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் போக்குவரத்துத் துறையின் https://parivahan.gov.in/parivahan/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.

தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? How to apply for Learner’s License Online in Tamil

பிறகு அதில் இருக்க கூடிய “Drivers/Learner License” என்ற பகுதிக்குச் செல்லவும்.பின்னர் “More” என்பதைக் கிளிக் உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யவும்.பின்னர் “Apply for Learner License” என்பதைக் கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் வழிமுறைகளை படித்து “Continue” என்பதை கிளிக் செய்யவும்.பிறகு “Submit Via Aadhaar Authentication” என்பதை செலெக்ட் செய்யவும்.இதை தொடர்ந்து உங்கள் ஆதார் நம்பரை பதிவிடவும்.இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.அதை என்டர் செய்து தேவையான தகவல்களை நிரப்பவும்.

பிறகு “Self Declaration (Form 1)” என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்கான பதிலை சரியாக என்டர் செய்யவும்.இதை தொடரந்து ​​தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பம் செய்யவும்.இவ்வாறு செய்தால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தற்காலிக ஓட்டுநர் உரிமம் தபால் வழியாக அனுப்பி வைக்கப்படும்.