Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 நிமிடத்தில் 10 லட்சம் கடன் பெற அரிய திட்டம்! ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் 

how to apply for mudra loan scheme in online tamil

how to apply for mudra loan scheme in online tamil

10 நிமிடத்தில் 10 லட்சம் கடன் பெற அரிய திட்டம்! ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.விவசாயிகள்,பெண்கள்,குழந்தைகள்,மூத்த குடிகள் என்று அனைவரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் உள்ளன.

முத்ரா கடன்

அந்தவகையில் தொழில் செய்ய விரும்பும் மக்களுக்கு ரூ.10,00,000 வரை கடன் வழங்கி வருகிறது.யூனியன் பேங்க் ஆப் இந்தியாவானது மத்திய அரசின் முத்ரா கடன் என்று அழைக்கப்படும் இந்த திட்டதில் வாயிலாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கடன் வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் சிறப்பே எதையும் அடகு வைக்காமல் கடன் பெறுவது தான்.இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க கடன் பெற விரும்பினால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.பிறகு வங்கி கடன் தொகையை வழங்கும்.

இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.50,000 கடன் பெற்றால் அதை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.ரூ.50,000க்கு கீழ் முத்ரா கடன் பெற வங்கியை அணுக தேவையில்லை.ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து கடன் பெற முடியும்.

முத்ரா கடன் பெற இருக்க வேண்டிய தகுதிகள்:-

நீங்கள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

21 முதல் 65 வயதுக்க்குள் இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெற முடியும்.

தொழில் செய்தல் மற்றும் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு மட்டுமே முத்ரா கடன் கிடைக்கும்.

முத்ரா கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்:-

1) ஆதார் அட்டை
2) பான் கார்டு
3) யூனியன் பேங்க் பாஸ் புக்
4) முகவரிச் சான்று(ரேசன் அட்டை)
5) வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்

முத்ரா கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

How to apply for mudra loan scheme in online tamil

1)யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் https://www.unionbankofindia.co.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

2)பிறகு அதில் உள்ள முத்ரா கடன் என்பதை தேர்வு செய்யவும்.பிறகு அதில் ஷோ ஆகும் படிவத்தில் பெயர்,ஆதார் எண்,வங்கி கணக்கு விவரம் மற்றும் மொபைல் எண் விவரங்களை பதிவிடவும்.

3)பிறகு உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை அதில் பதிவிட்டால் EMI குறித்த விவரம் ஷோ ஆகும்.

4)அதில் தங்களுக்கு ஏற்ற EMI விருப்பத்தைத் தேர்வு செய்து “Submit” என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு உங்கள் விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 10 நிமிடங்களில் உங்கள் வங்கி கணக்கிற்கு உங்களின் விருப்ப கடன் தொகை வரவு வைக்கப்படும்.

குறிப்பு:-

யூனியன் வங்கியில் கணக்கு இல்லாதவர்களுக்கு முத்ரா கடன் வழங்கப்படாது.

தொழில் முனைவோரை தவிர பிறருக்கு கடன் வழங்கப்படாது.

Exit mobile version