Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற பட்டியலும் போக்குவரத்து கழக துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆன்லைன் மூலம் பேருந்துகள் முன்பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் புகார்களை தெரிவிப்பதற்கும் போக்குவரத்துக் கழகம் 9445014450 மற்றும் 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாமென்று தெரிவித்துள்ளது.

மேலும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1800425615 மற்றும் 044 – 24749002
044 – 26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் மக்களுக்கு,பயணிகளின் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 20 இடங்களில் மே ஐ ஹெல்ப் யு(may I help you)
என்ற பெயரில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து கழக சார்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version