Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து!

எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து!

பிளாஸ்டிக் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத பொருளாகவே மாறிவிட்டது.
நாம் சிறுவயதில் இருந்தே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் டப்பா என அனைத்தையும் பயன்படுத்தி இருப்போம்.ஆனால் அதில் கீழே முக்கோண வடிவினுள் ஓர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த எண்னை எதற்காக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? ஆம் அதில் குறிப்பிட்டிருக்கும் எண் அந்த பிளாஸ்டிக்கின் தரத்தை குறிப்பதாகும்.ஒவ்வொரு எண்ணிற்கும் என்னென்ன தரம் எந்த பிளாஸ்டிகை பயன்படுத்தினால் ஓரளவுக்கு நல்லது என்பதனை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

முக்கோண வடிவ குறியீட்டினுள் எண்:

ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளின் முக்கோண வடிவ குறியீட்டினுள் 1- முதல் 7 வரை ஏதேனும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எந்த எண் குறிப்பிட்டிருந்தால் எந்த வகையான பிளாஸ்டிக் என்ன தரம்?

எண் 1: இந்த வகை பிளாஸ்டிக் PET எனப்படும் பாலி எத்திலின் டேராப்தலலேட்(paaliethylene therephthalate)என்னும் வேதிப்பொருளால் தயாரிக்கப்பட்டது.இந்த வகை பிளாஸ்டிக்,கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்,வாட்டர் பாட்டில் போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.இந்த வகை வேதிப்பொருளால் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது அதன் காலாவதி தேதி முடியும் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது போன்ற பிளாஸ்டிக்கை காலாவதி தேதியை தாண்டியோ அல்லது அதிக வெப்பமுள்ள இடத்திலோ பயன்படுத்தினால் இதிலிருந்து ஆன்ட்டி மோனி என்னும் கெமிக்கல் இதிலிருந்து வெளிப்படும்.இந்த கெமிக்கலானது மனிதருக்கு மிகவும் ஆபத்தானதாகும்.

எண்:2

HDPE(high density polyethylene) ஹைடென்சிட்டி பாலி எத்திலின் என்னும் வேதிப்பொருளால் தயாரிக்கப்படுகிறது இந்த வகை பிளாஸ்டிக் மிகவும் உறுதியானதாக இருக்கும்.அது மட்டுமின்றி அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க கூடியதாகவும் இருக்கும்.இந்த வகையான பிளாஸ்டிக் பாட்டில் ஷாம்பு,டிடர்ஜென்ட் போன்ற பொருட்கள் அடைக்க பயன்படுத்தப்படுகிறது.

எண்:3

இந்த வகை பிளாஸ்டிக் pvc பாலிவினைல் குளோரைடு என்னும் வகையை சேர்ந்தது.இந்த பிளாஸ்டிக் பைப்புகள் கரண்ட் பைப்புகள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

எண்:4

LDPE (LOW DENSITY POLY ETHYLENE) இந்த வகை பிளாஸ்டிக்குகள் கேரி பேக்குகள்,ஹோட்டலில் உணவை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றையில் பயன்படுத்தப்படுகிறது.இது ஓரளவிற்கு பாதுகாப்பு என்றாலும் இதனை மறுசுழற்சி செய்ய முடியாது எனவே இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு.

எண்:5

PP(poly propelin) என்னும் வகையைச் சேர்ந்த பிளாஸ்டிக் ஆகும்.இந்த வகை பிளாஸ்டிக் மிகவும் பாதுகாப்பானதாகும்.
இந்த வகை பிளாஸ்டிக்கில் மருந்து பாட்டில்கள் டயப்பர்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.மேலும் இதனால் தயாரிக்கப்பட்ட வாட்டர் பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகள் சற்று விலை உயர்ந்ததாகவும் இருக்கும்.

எண்:6

PS( poly Styrene) என்னும் வகையைச் சேர்ந்தது. இந்த வகை பிளாஸ்டிக் டிவிடிகள் மற்றும் மிகவும் லேசான பிளாஸ்டிக் பொருட்கள் அதாவது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவு கப்புகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.இதுவும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியதாகும்.

எண்:7

இந்த வகை பிளாஸ்டிக் எந்த வகையிலையும் வகைப்படுத்தப்படாத பிளாஸ்டிக் ஆகும் எனவே இந்த பிளாஸ்டிக் முற்றிலும் தடுப்பது நன்மை விளைவிக்கும்.

இந்த ஏழு வகை பிளாஸ்டிக்கைகளில் மனித பயன்பாட்டிற்கு ஓரளவிற்கு உகந்த பிளாஸ்டிக் எதுவென்றால் 2,4,5 குறியீடு உள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது நல்லது.இனி பிளாஸ்டிக்கை வாங்கும் பொழுது விலையை பார்த்து வாங்காமல் அதில் உள்ள குறியீடை பார்த்து வாங்கி பயன்படுத்துவது நமக்கும் நம் சுற்றுச் சூழலுக்கும் மிகவும் நன்மை விளைவிக்கும்.

Exit mobile version