Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அட இவ்வளவுதானா? இதை வைத்து தேய்த்தால் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்!

நாம் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பாத்திரங்களில் ஒன்றுதான் பூஜை பாத்திரம். அந்த பூஜை பாத்திரங்கள் அனைத்தும் வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாம் சுத்தம் செய்வோம். எவ்வளவுதான் தேய்த்தாலும் அந்தப் பாத்திரங்கள் பளிச்சென்று ஆகவில்லையா? இதோ உங்களுக்கான அற்புதமான டிப்ஸ்.

தேவையான பொருள் பழைய புளி அவ்வளவுதான்.

முறை 1:

1. முதலில் ஒரு வானலி சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
3. இப்பொழுது ஒரு கைப்பிடி உருண்டை புளியை எடுத்து தண்ணீரில் போடவும்.
4. புளி பழைய புளியாக கூட இருக்கலாம்.
5. இப்பொழுது இந்த தண்ணீர் நன்றாக கொதிக்கட்டும்.
6. ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
7. இப்பொழுது உங்களது பூஜை பாத்திரங்கள் அனைத்தையும் அந்த தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
8. இப்பொழுது அந்தப் பாத்திரங்களை எடுத்து நாம் எப்பொழுதும் போல தேய்த்தால் உங்களது பூஜை பாத்திரங்கள் புதுசு போல் மின்னும்.

முறை 2:

கொதிக்கும் நீரில் பூஜை பாத்திரங்களை போட மனம் வரவில்லை என்றால், தண்ணீரில் ஒரு உருண்டை அளவு புளி போட்டு கரைத்து விட்டு அதனுடன் அரை எலுமிச்சைப் பழ ஜூஸை கலந்து பூஜை பாத்திரங்களை ஊற வைத்து கழுவினால் பூஜை பாத்திரங்கள் பளிச்சிடும்.

வெறும் புளியை வைத்து கூட பாத்திரங்களை தேய்க்கும் பொழுது பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும்.

Exit mobile version