தினமும் மூட்டு வலி படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் ஒரே நாளில் சரியாகி விடும்!!
முன்பெல்லாம் வயதானவர்களை மட்டும் பாதித்து வந்த மூட்டு வலி இன்று இளம் வயதினரையும் பாடாய் படுத்தி வருகிறது.இந்த மூட்டு வலி பாதிப்பால் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாது.படி ஏறுதல்,இறங்குதல்,நீண்ட நேரம் நின்று வேலை பார்த்தால் போன்ற எதையும் செய்ய இயலாது.
எனவே இந்த மூட்டு வலியை அதிக செலவின்றி எளிதில் குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பின்பற்றவும்.
1)நொச்சி இலை
ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை அரைத்து பேஸ்டாக்கி மூட்டுகளின் மேல் பற்று போட்டு வந்தால் மூட்டு வலி ஒரு வாரத்தில் குணமாகி விடும்.
1)முடக்கத்தான் இலை
2)மஞ்சள்
மூட்டு வலியை குணமாக்க முடக்கத்தான் இலை அரைத்து மஞ்சள்தூள் போட்டு கலக்கி மூட்டுகளின் மேல் பற்று போடவும்.
1)எருக்க இலை
இரண்டு அல்லது மூன்று எருக்க இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து மூட்டுகளின் மேல் தடவி வந்தால் மூட்டு வீக்கம்,வலி,ஜவ்வு தேய்மானம் ஆகியவை குணமாகும்.
1)துத்தி இலை
2)பிரண்டை இலை
1/2 கைப்பிடி அளவு துத்தி இலை மற்றும் பிரண்டை இலை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை மூட்டு பகுதியில் தடவி வந்தால் அங்கு ஏற்பட்டிருக்கும் வலி,வீக்கம் முழுமையாக குறையும்.
1)வேப்பிலை
2)விளக்கெண்ணெய்
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி 1/2 கப் விளக்கெண்ணையில் காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை மூட்டு பகுதியில் தடவி வந்தால் மூட்டு தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.