கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

0
174

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

தற்போதைய சூழலில் அவசரத்திற்காக கால் செய்யும் பொழுது கூட இந்த கொரோனா காலர் டியூனால் நாம் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளாகிருப்போம்.ஏன் தற்போது எட்டாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட பொழுதுகூட இந்த காலர் டியூனை கட் (cut) செய்வதற்கான மீம்ஸ்கள்(memes) சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.தற்போது கொரோனா காலர் டியூனை நிரந்தரமாக டி ஆக்டிவேட் செய்ய அந்தந்த நெட்வொர்கள் ஒரு எண்ணை வெளியிட்டுள்ளனர். அதை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!

நாம் நோயுடன் போராட வேண்டும் நோயாளியுடன் அல்ல என்ற காலர் டியூனை உங்கள் மொபைலில் இருந்து டி ஆக்டிவேட் (deactivate) செய்ய

Airtel வாடிக்கையாளராக இருந்தால்
*646*224# என்ற எண்ணிற்கு கால் செய்து கொரோனா காலர் டியூனை டீ ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

Jio வாடிக்கையாளராக இருந்தால் 155223 என்ற எண்ணிற்கு  STOP என்று டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.

IDEA வாடிக்கையாளராக இருந்தால் 155223 என்ற எண்ணிற்கு  STOP என்று டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.

Vodafone வாடிக்கையாளராக இருந்தால் 144 என்ற எண்ணிற்கு  CANCT என்று டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.

BSNL வாடிக்கையாளராக இருந்தால் 56700 என்ற எண்ணிற்கு UNSUB என்று டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.