உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி லைப் நீண்ட காலம் வர செய்ய வேண்டியவை

0
172

உங்கள் மொபைலை 100% Charge செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று பெரும்பாலோனோருக்கு தெரியாது.

Smart போன் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை சார்ஜ் குறைவது மட்டுமே. ஆனால் அதற்காக 100% வரை சார்ஜ் செய்வது பேட்டரி லைப் – யை குறைத்து விடும். பேட்டரியின் லைப்பை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பலரும் சிந்திப்பதுண்டு.

பேட்டரி சைக்கிளிக் முறை :
பொதுவாகவே அனைவரும் லித்தியம் அயான் பேட்டரியை தான் பயன்படுத்துகின்றோம். அதாவது சார்ஜ் செய்யும் போது அதிகம் சூடு ஆவதாலும் 100% சார்ஜ் செய்வதாலும் பேட்டரி சைக்கிளிக் முறை பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் உங்கள் போனில் பேட்டரி லைஃப் குறைந்துவிடும்.

சைக்கிளிக் முறை என்றால் என்ன :
அதாவது 0-100% வரை சார்ஜ் செய்வது ஒரு சைக்கிளிக் (cyclic) ஆகும்.அதாவது ஒரு 1000 mah பேட்டரியை எடுத்துக் கொள்வோம் அதன் மொத்த சார்ஜ் சைக்கிளிக் எண்ணிக்கை 500 ஆக வைத்துக்கொள்வோம்.

இந்த 0-100% வரை 1 சைக்கிளிக் என்றால் இதேபோன்று 500 க்கு மேற்பட்ட முறை போட்டால் 1000 mah பேட்டரி 900 mah பேட்டரி ஆக மாறும்.இதனால் உங்கள் பேட்டரி லைஃப் எளிதில் குறைந்து விடும்.

போனை சார்ஜ் செய்ய சைக்கிளிக் முறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் :
அதாவது நம்ம போனில் சார்ஜ் 0% இறங்கும் வரை எக்காரணம் கொண்டும் விடவே கூடாது.அதேபோன்று 100% வரை சார்ஜ் போட கூடாது.

மேலும் போனில் 15 to 20% இருக்கும் போதே சார்ஜ் போட வேண்டும். 80 to 85% க்கு மேல் சார்ஜ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி சார்ஜ் சைக்கிளிக் முறையை சரியாக பின்பற்றினால் 1 சைக்கிளிக் முடிவடைவது தடுக்கப்படும். இதனால் உங்கள் பேட்டரி லைப் நீண்ட காலம் வரும்.