Whatsapp கால்களை பதிவிறக்கம் செய்யும் முறை!! பயனர்களுக்கு புதிய அறிமுகம்!!

0
77
How To Download Whatsapp Calls!! New introduction for users!!

நம்முடைய ஃபோன்களுக்கு வரக்கூடிய கால்களை பதிவிறக்கம் செய்வது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகவே உள்ளது. ஆனால் whatsapp களில் பேசக்கூடிய வாய்ஸ் கால்களை ரெக்கார்ட் செய்வது என்பது முடியாத விஷயம்.

இதனை இப்பொழுது மாற்றும் வகையில் சில வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. Whatsapp கால்களை வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும் மூன்றாவது செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்வது எளிதான காரியம். இதனை பின்வரும் படி செய்யலாம்.

✓ கூகுள் பிளே ஸ்டோரில் சென்று Cube ACR, Salestrail அல்லது ACR Call Recorder போன்ற செயலிகளை தேடி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

✓ பின்னர், செயலியை முதல் முறையாக திறக்கும்போது, மைக்ரோபோன் மற்றும் சேமிப்பு போன்ற அனுமதிகளை கேட்கும். அவற்றிற்கு அனுமதி வழங்குதல் வேண்டும்.

அதன் பின்னர் whatsapp மூலம் நாம் பேசக்கூடிய கால்களானது தானாகவே இந்த செயல்களில் சென்று பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும். இதன் மூலம் முக்கியமான தகவல்கள் மற்றும் செய்திகளை சேகரித்து வைத்துக் கொள்வது மட்டுமே முறையானது ஆகும்.

சில நாடுகளில் மற்றவரின் அனுமதியின்றி அவர்களின் அழைப்பை பதிவு செய்வது சட்டவிரோதம் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது.