வெயில் காலத்தில் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?? எதை சேர்த்து பருகினால் நல்லது!!
கோடை காலம் வந்துவிட்டாலே அதிகப்படியான நீர்ச்சத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் ஒரு நாளில் மூன்று லிட்டருக்கும் மேல் தண்ணீர் பருக வேண்டும். ஆனால் நாம் போதுமான அளவு நீர்ச்சத்து எடுத்துக் நாம் போதுமான அளவு நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளாவிட்டால் நீர் கடுப்பு சிறுநீர் பாதையில் தொற்று போன்றவை சந்திக்க நேரிடும். அதேபோல நாம் அருந்தும் தண்ணீரில் சில பொருட்களை சேர்த்து பருகினால் உடலானது எப்பொழுதும் குளிர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் காணப்படும். அப்படி நம் குடிக்கும் தண்ணீரில் எந்தெந்த பொருட்களை சேர்த்து பருகலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெட்டிவேர்
நன்னாரி வேர்
மிளகு
சீரகம்
பெருஞ்சீரகம்
வெட்டிவேர் தண்ணீரில் சேர்த்து பருகுவதால் நமது உடலில் இருந்தும் வியர்வை துர்நாற்றம் வருவதை தடுக்கும்.
நன்னாரி வேரை உபயோகிப்பதால் நமது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.
மிளகு மற்றும் சீரகம் சேர்ப்பதால் நமது உடலை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும்.
பெருஞ்சீரகம் நமது செரிமானத்திற்கு உதவிகரமானதாக இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஓர் வெள்ளை காட்டன் துணியில் போட்டு நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இதனை நாம் அருந்தும் தண்ணீரில் போட்டு விட வேண்டும்.
பின்பு இந்த மூலிகை தண்ணீரை தொடர்ந்து பருகலாம்.
இந்த தண்ணீரில் போடும் பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம்.