அத்திப் பழத்தைத் எந்த நேரத்தில் எப்படி உண்ண வேண்டும்!

0
216
How to eat figs at what time!

அத்திப் பழத்தைத் எந்த நேரத்தில் எப்படி உண்ண வேண்டும்!

அத்திப்பழத்தில் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும்.இதில் விட்டமின், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது

அத்திப்பழத்தை வழக்கமான உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் அல்லது 2 மணி நேரத்துக்குப் பின்னர் உண்ண வேண்டும்.

அத்திப்பூ பூப்பதே தெரியாது. அத்தி மரப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து உடம்பு நன்றாக விருத்தியாகும்..

அத்திக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும். குறிப்பாக தசை இறுகும். எலும்புக்கு வலிமையை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

• அத்திப்பழம்
• பால்
• தேன்
• நாட்டு சக்கரை

செய்முறை:

1. அத்திப்பழத்தை நசுக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
2. காய்ந்த அத்திப்பழத்தை அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
4. சூடான பாலில் அத்திப்பழ பொடியை சேர்த்து அத்துடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து அருந்தலாம்.

அத்திப்பழ பொடியை குழந்தைகளுக்கு பாலில் சேர்த்து கொடுத்து வந்தால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்கும்.

அத்திப்பழம் ஆண், பெண் இருபாலரும் தினமும் ஐந்து முதல் பத்து வரை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் விந்தனுக்கள் விருத்தியாகும்.

அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து சமப்படுத்தும்.