தொங்கும் மார்பகங்கள் சரி செய்வது எப்படி?

0
225
how-to-fix-sagging-breasts

மார்பகங்கள் ஏன் தொய்வடைகின்றன, காரணம் மார்பகங்களில் தசை நார்கள், இணைப்பு திசுக்கள் நீட்சி அடைகின்றன. அதனால் மார்பகங்கள் தொய்வடைகிறது. வயதாகும் போதும் மார்பகங்கள் தளர்ந்து விடும்.

தளர்ந்த  மார்பகங்களை சரி செய்வதற்கான எளிய முறைகளை பார்க்கலாம். இதற்கு நமக்கு தேவையானது தேங்காய் எண்ணெய் மட்டுமே. ஆலிவ் ஆயிலையும் உபயோகப்படுத்தலாம். முதலில் ஒரு சிறு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும்.

இந்த தேங்காய் எண்ணெயை சூடுப்படுத்தி கொள்ளவும். அடுப்பை மிக குறைந்த தீயில் வைத்து மிதமாக கை பொறுக்கும் சூட்டில், சூடுபடுத்தி எடுத்து கொள்ளுங்கள். இந்த சூடு படுத்திய எண்ணெயை வைத்து மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும்.

மிதமான சூட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயை எடுத்து இரு கைகளிலும் தடவி கொள்ளுங்கள் இந்த மசாஜை இரு கைகளாலும் தான் செய்ய வேண்டும். ஒரு கையால் செய்ய கூடாது. இரு கைகளிலும் எண்ணெயை தடவி கொண்டு மார்பகங்களின் அடிப்பகுதியில் இருந்து மேல் நோக்கி தடவி மசாஜ் செய்யவும். மேலிருந்து கீழாக செய்ய கூடாது. இதை ஒரு 15 முதல் 20 விநாடிகள் வரை கீழிருந்து மேலாக தடவும் போது மார்பகங்களின் இரத்த ஓட்டத்தை சீராக்க இது உதவுகிறது.

மார்பகங்களில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதை தினமும் இரவிலோ, இல்லை குளிப்பதற்கு முன்னரோ செய்யலாம். இதை தொடர்ந்து 7 நாட்கள் செய்தால் இதன் பலனை கண்கூடாக காணலாம். மேலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை செய்ய வேண்டாம். வேறு மருத்துவ பிரச்சினைகள் இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறப்படுகிறது.