வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதோ நீங்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கட்சி அல்லது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கலாம்.ஆனால் சிலர் முதல் முறையாக வாக்களிக்க உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வராமல் காத்திருக்கலாம்.அப்படி காத்திருப்பவரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டாம் இதோ உங்களுக்கான தீர்வு
வாக்காளர்கள் அனைவரும் இணைய முறையில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் திட்டமானது சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்த வசதியானது, தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 21.39 லட்சம் வாக்காளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 வரை நடத்தப்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமின் போது வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தவர்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயரை சேர்க்கும் போது தாங்கள் வழங்கிய செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய வசதியானது http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியில் செய்யப்பட்டுள்ளது. மற்ற வாக்காளர்களுக்கும் இந்த வசதியானது விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலமாக ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய அவருடைய வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்ததும், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான குறுந்தகவல் செல்லிடப்பேசிக்கு வந்திருக்கும். அதில் இபிஐசி எனப்படும் வாக்காளர் அடையாள எண் இருக்கும். அந்த எண்ணை வைத்து தான் இந்த வசதியின் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய http://www.nvsp.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள்.பின்னர் உங்களது செல்லிடப்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரியை முதலில் அங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.பிறகு உங்களுக்கான புதிய பயனாளர் முகவரியை உருவாக்குங்கள்.
பின்னர் அதனைக் கொண்டு உள் நுழைந்து, உங்களது வாக்காளர் அடையாள எண் அல்லது அது தொடர்பாக உங்களுக்கு குறுந்தகவலில் வந்த எண்ணைப் பதிவு செய்யுங்கள். உங்களது மாநிலத்தையும் பதிவு செய்து, வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?,வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல்,வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,வாக்காளர் அடையாள அட்டை 2021,அடையாள அட்டை in english,ஆதார் அட்டை விண்ணப்ப படிவம்,வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடவும்,வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனால்,NVSP,வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் 2020,Voter ID download,வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?,வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?,வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம்