குழந்தைகளுக்கு பான் அட்டை பெறுவது எப்படி? ஜஸ்ட் ஒன் க்ளிக்.. போதும்!

0
200
How to get pan card for children? Just one click.. That's it!

குழந்தைகளுக்கு பான் அட்டை பெறுவது எப்படி? ஜஸ்ட் ஒன் க்ளிக்.. போதும்!

இந்தியாவில் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு இன்றியமையாத ஒன்றாகி விட்டது.வங்கி கணக்கு திறக்க,சொத்துக்கள் வாங்க,பணப்பரிமாற்றம் செய்ய,வருமான வரி செலுத்த பான் கார்டு உதவுகிறது.

பான் ஒரு 10 இலக்க வரிவடிவ குறியீடு கொண்ட அட்டையாகும்.இந்த 18 அட்டையை வயதிற்கு மேற்பட்டவர்கள் எளிதில் பெற முடியும்.ஆனால் நீங்கள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால் உங்களுக்கான பான் அட்டை எவ்வாறு பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளில் யாருக்கெல்லாம் பான் கார்டு தேவைப்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தையின் பெயரில் முதலீடு செய்வதற்கு பான் கார்டு தேவைப்படுகிறது.நீங்கள் செய்யும் முதலீட்டில் உங்கள் குழந்தையை நாமினியாக சேர்க்க பான் கார்டு தேவைப்படும்.குழந்தைகள் பி[ பெயரில் வங்கியில் கணக்கு தொடங்க பான் கார்டு தேவைப்படும்.

குழந்தைகளுக்கு பான் அட்டை பெறுவது எப்படி?

முதலில் NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள படிவம் 49A என்பதை பதிவிறக்கம் செய்யவும்.

பிறகு அந்த படிவத்தை நிரப்பவும்.பின்னர் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்,பெற்றோரின் புகைப்படம் மற்றும் கேட்கப்படும் ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து இணையத்தில பதிவேற்றம் செய்யவும்.

அதன் பின்னர் பான் கார்டு பெற ரூ.107 கட்டணம் செலுத்தவும்.பின்னர் தங்களுக்கான ரசீது எண்ணைப் பெற்றுக் கொள்ளவும்.இவ்வாறு செய்த 15 நாட்களுக்குள் உங்கள் குழந்தைக்கான பான் கார்டை தபால் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுவிடும்.