Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!

How to get rid of bad energy in the house

How to get rid of bad energy in the house

இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் என்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது.நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால்,தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய விஷயங்கள் நிகழ்கிறது.அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் வெளிப்பாடே கண் திருஷ்டி.

கண் திருஷ்டியால் வீட்டில் சோக நிகழ்வுகள்,பணக் கஷ்டம்,தொழிலில் நஷ்டம் ஆகியவை ஏற்படும்.இந்த தீய சக்திகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வாழ்வில் முன்னேற்றம் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றி வரவும்.

வீட்டில் அதிகளவு எதிர்மறை ஆற்றல் நிறைந்து இருந்தால் எந்த ஒரு நல்ல நிகழ்வும் ஏற்படாது.இந்த கெட்ட விஷயங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வீட்டில் ஒரு தூபம் போட்டு வாருங்கள்.

இதற்கு தேவைப்படும் பொருட்கள் ஏலக்காய்,வெண் கடுகு,கல் உப்பு ஆகும்.இந்த பொருட்களை சம அளவு எடுத்து தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டவும்.இந்த மூன்று பொருட்களும் கெட்ட ஆற்றலை உள் ஈர்த்து நல்ல ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவை.

இந்த தூபத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் ஆகியவை அடியோடு அழியும்.

Exit mobile version