ரூ.42 செலுத்தி மாதந்தோறும் ரூ.5,000 பெறுவது எப்படி? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் வழங்க கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.இது மிகவும் பாதுகாப்பான திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 100% கேரண்டி உண்டு.
இந்த திட்டம் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.தினசரி தொழில் செய்வோர்,தினக் கூலி பெறுவோர்,சுயத் தொழில் செய்வோருக்கு இந்த திட்டம் அவர்களின் ஓய்வு காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.ஒவ்வொரு மாதமும் பிரீமியம் தொகை செலுத்தி வந்தால் 60 வயதை கடந்த பின்னர் பிரீமியம் தொகைக்கேற்ப மாதம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெற முடியும்.
குறைந்த வயதான 18-இல் இருந்து மாதந்தோறும் ரூ.42 அல்லது ரூ.210 பிரீமியம் செலுத்தி வந்தால் ஓய்வுக்குப் பிறகு மாதாமாதம் ரூ.5,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
உங்களுக்கு தற்பொழுது 40 வயதாகிறது என்றால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ரூ.1,454 பிரீமியம் செலுத்த வேண்டும்.இவ்வாறு செய்தால் தான் ஓய்வு காலத்தில் ரூ.5,000 ஓய்வூதியம் பெறமுடியும்.தகுதி வாய்ந்த ஒருவர் அரசு பொதுத்துறை வங்கி அல்லது அரசு அங்கிகாரம் பெற்ற தனியார் வங்கிகளில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை தொடங்கி பிரீமியம் தொகை செலுத்தி வரலாம்.