Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் HB அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

Increase hb level in Tamil

Increase hb level in Tamil: கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது இந்த இந்த ஹீமோகுளோபின் குறைபாடு தான். குழந்தைக்கு தேவையான வளர்ச்சிக்கு இந்த ஹீமோகுளோபின் சரியான விகித்தில் இருப்பது கட்டாயம். ஆனால் இந்தியாவில் இரத்தசோகைக்கு அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மற்ற தசைகளுக்கு ஆக்ஸிஜன் எடுத்து செல்லும் இரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11.5-13.0 g/dl இருப்பது முக்கியமான ஒன்றாகும். 10g/dl குறைந்தால் அது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்ககும். மேலும் இதனை கவனிக்காமல் விட்டால் அவர்களுக்கு பிரசவத்தின் போது சிக்கலாகிவிடும். மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க சில உணவுப்பொருட்களை எடுத்து வந்தாலே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய முடியும். அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் இரத்த சோகையில் இருந்து மீள முடியும் என்பதை காணலாம்.

HB அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்- which food increase hb level in tamil

பச்சை காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் HB அளவை அதிகரிக்க செய்யலாம். அதாவது நீங்கள் தினசரி உணவில் ஒரு கீரை வகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் முருங்கை கீரையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் முருங்கை கீரையை தினசரி சாப்பிட்டு வரலாம்.

மேலும் சுவரொட்டி எனப்படும், மட்டன் மண்ணீரலை நன்றாக கழுவி உப்பு, மிளகு தூள் போட்டு நெருப்பில் வாட்டி வாரம் இருமுறை சாப்பிட்டு வர இரத்தம் பெருகும்.

தினசரி இரண்டு பேரிச்சை பழம் சாப்பிட்ட வர வேண்டும்.

மேலும் காய்கறிகளில் புரொக்கலி எனப்படும் காய்கறியில் சற்று இரும்பு சத்து அதிகமாக காணப்படுவதால் உணவில் இதனை சேர்த்துக்கொள்ளலாம். மேலும் அனைத்து வகையான காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொய்யா பழத்திலும் இரும்பு சத்து காணப்படுவதால் மற்ற பழங்களை உண்பதுடன், கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிட்டு வரலாம்.

உலர் பழங்கள், அத்திப்பழம், மற்றும் பருப்பு வகையான காராமணி போன்றவற்றில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

மேலே குறிப்பிட்ட உணவுகளில் கவனம் செலுத்தி மற்ற காய்கறிகள், பச்சை கீரைகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் மருத்துவரிடம் சென்று இரத்தில் ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்!

Exit mobile version