“பீட்ரூட் பச்சடி” கேரள மக்கள் ஸ்டைலில் செய்வது எப்படி?
உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்க கூடிய காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். இந்த காயை வைத்து பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் கேரளா முறைப்படி செய்தால் அதிக சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*பீட்ரூட் – 1 கப் (வேகவைத்து தோலுரித்து, துருவியது)
*தேங்காய் துண்டுகள் – 1/2 கப்
*பச்சை மிளகாய் – 1
*சீரகம் – 1 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 4 கொத்து
*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
*கடுகு – 1 தேக்கரண்டி
*வர மிளகாய் – 1
*பெருங்காயம் – சிட்டிகை அளவு
*தயிர் – 1 கப்
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் வேகவைத்து தோலுரித்து துருவிய பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்து வைத்துள்ள பீட்ரூட் பேஸ்டை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். அடுத்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுத்து 1 கப் தயிர் ஊற்றி கிளறி சில நிமிடத்தில் இறக்கவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1 தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.
பின்னர் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விடவும். அடுத்து 1 வர மிளகாய், சிறிதளவு பெருங்காயம், 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
தாளித்த பொருட்களை பீட்ரூட் பச்சடியுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் பீட்ரூட் பச்சடி தயார்.