Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலுக்கு வலிமை சேர்க்கும் கேழ்வரகு முறுக்கு – சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு வலிமை சேர்க்கும் கேழ்வரகு முறுக்கு – சுவையாக செய்வது எப்படி?

கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம்.

இவ்வளவு சத்து கொண்ட கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு சுடலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – 1000 கிராம்
அரிசி மாவு – 500 கிராம்
வெண்ணை – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உடைத்த கடலை மாவு – 500 கிராம்
சீரகம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் – சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவினை சேர்த்து, அதில் அரிசி மாவு, கடலை மாவு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இதன் பிறகு, உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பின்னர், தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, மாவை மென்மையாக பிசைய வேண்டும்.

இதன் பின்னர், முறுக்கு அச்சில் சிறிதளவு எண்ணெய் தடவி, அதில் பிசைந்து வைத்த மாவை அதில் போட வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு ஒரு பூந்தி கரண்டியில் பிழிய வேண்டும்.

முறுக்கு பிழியும் போது எண்ணெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும்.பிழிந்த பிறகு மிதமான தீயில் வைத்து 2 பக்கமும் சிவந்து வறுத்து எடுக்க வேண்டும்.சுவையான சத்தான கேழ்வரகு முறுக்கு ரெடி.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கேழ்வரகு முறுக்கை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Exit mobile version