ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

0
231
#image_title

ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

நம் வீட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காயில் சட்னி, துவையல், குழம்பு என வைப்போம். உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், தேங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது.

தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்துக்கு நல்லது. மேலும், தினமும் தேங்காயைச் சாப்பிட்டு வந்தால், உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதை தடுக்கும். தேங்காய் நம் உடம்பில் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவி செய்யும். தினமும் தேங்காய் சாப்பிட்டு வந்தால், கணையத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டி, சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – 2 கப்

சர்க்கரை – 2 கப்

தண்ணீர் – 1 கப்

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 8 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, அதில் தண்ணீர் கொதிக்க விட வேண்டும்.

சர்க்கரை கொஞ்சம் கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும். அப்போது, துருவிய தேங்காயை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

தேங்காயை சேர்த்து நுரைக்க ஆரம்பிக்கும் போது, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அப்போது, அடுப்பை அணைத்து விட வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, அதில் தேங்காய் கலவையை கொட்டி சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூடு கொஞ்சம் குறைந்த பிறகு, ஒரு கத்தியால் வெட்டி எடுத்தால் சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி.