Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டு முறையில் கொத்தமல்லி தூள் செய்யும் முறை!! உணவில் 100% சுவையை கொடுக்கும்!!

#image_title

வீட்டு முறையில் கொத்தமல்லி தூள் செய்யும் முறை!! உணவில் 100% சுவையை கொடுக்கும்!!

நம் இந்தியர்களின் உணவில் மசாலா பொருட்கள் அதிகம் இடம் பெற்றுகிறது.காரணம் அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்கள்.அதுபோல் கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட சைவ மற்றும் அசைவ உணவுகளின் ருசியை கூட்டுவதில் கொத்தமல்லி தூளுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த கொத்தமல்லி துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை – 2 கப்

*வர மிளகாய் – 10

*சீரகம் – 1 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1/2 கப்

*கருப்பு மிளகு – 1/2 கப்

*கருவேப்பிலை – 1/2 கப்

*கடலை பருப்பு – 1/2 கப்

*பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.அவை சூடேறியதும் 2 கப் கொத்தமல்லி விதை,10 வர மிளகாய் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் 1/2 கப் கடலைப்பருப்பு,1/2 கப் கறிவேப்பிலை,1/2 கப் உளுந்து,1 தேக்கரண்டி சீரகம்,1/2 கப் கருப்பு மிளகு,1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிடவும்.

பின்னர் வறுத்த அணைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற விடவும்.பிறகு காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.கொத்தமல்லி தூள் இந்த முறையில் செய்து குழம்புக்கு பயன்படுத்தினால் குழம்பு மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.

Exit mobile version