Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Instant Mehndi: மருதாணி, மெஹந்தி தேவையில்லை 2 நாள் ஆனாலும் அழியாது..!

Instant Mehndi

Instant Mehndi: மருதாணி வைத்துக்கொள்வதென்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மருதாணி வைத்து அது அவர்களின் கைகளில் சிவந்திருந்தால் அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படும். மேலும் மருதாணி இலைகளை பறித்து அதனை அரைத்து கை, கால் பாதங்களில் வைத்துக்கொள்வது அழகையும் தாண்டி மருத்துவ குணம் வாய்ந்தது. உடலுக்கு நல்ல குளிர்ச்சி கொடுக்கும்.

மருதாணி (instant maruthani liquid) வைத்த காலம் மறைந்து, அதன்பிறகு மெஹந்தி வைத்துக்கொண்டார்கள். அதில் அழகான டிசைன்கள் வரைந்து கைகளை அழகு படுத்திக் கொண்டார்கள். மேலும் மெஹந்தியில் பல கெமிக்கல் கலந்திருப்பதால் அதனை பயன்படுத்து ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. அந்த வகையில் வெறும் 5 நிமிடத்தில் மருதாணி லிக்விட் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் (Instant Mehndi in Tamil) பார்க்கலாம். மேலும் இந்த மருதாணி 2 நாட்கள் ஆனாலும் அழியாது.

தேவையான பொருட்கள்

செய்முறை

ஒரு பழைய பாத்திரம் அல்லது மண் சட்டி உபயோகிக்காதது எடுத்து கொள்ள வேண்டும். இப்போது மண் சட்டியின் நடுவில் ஒரு சிறிய கிண்ணம் வைத்துக்கொள்ள வேண்டும். நடுவில் வைத்த கிண்ணத்தை சுற்றிலும் வெல்லம் துருவியது, சீரகம் ஆகியவற்றை போட்டுக்கொள்ள வேண்டும்.

கிண்ணத்தில் போட கூடாது. இப்போது மண் சட்டியின் மேல் அதன் வாய்ப்பகுதிக்கு ஏற்றவாறு ஒரு கிண்ணத்தை வைத்து அதன் மேல் தண்ணீரை ஊற்றி வைத்து, அந்த கிண்ணத்தையும் மூடிக்கொள்ளவும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அப்படியே அந்த மண் சட்டியை தூக்கி அடுப்பில் வைத்துக்கொள்ளவும். தீயை மீடியமாக வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மண் சட்டியில் இருந்து புகையாக வரும். அதற்காக பயப்பட வேண்டாம். புகை வந்த பிறகு சரியாக 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

உடனே திறக்காமல் 2 நிமிடம் கழித்து திறந்தால் மண் சட்டியில் உள்ளே வைத்த கிண்ணத்தில் பழுப்பு நிறத்தில் நீர் இருக்கும். அந்த கிண்ணத்தை எடுத்து அந்த நீரில் சிறிது, சிறிதாக சிவப்பு குங்குமத்தை கலந்துக்கொள்ள வேண்டும். கெட்டி ஆகிவிட்டால் 2 சொட்டு தண்ணீர் விட்டுக்கொள்ளலாம்.

மருதாணி வைக்கும் பதத்தில் எடுத்துக்கொண்டு, ஒரு பட்ஸ் வைத்து உங்களுக்கு பிடித்த டிசைன்களில் வைத்துக்கொள்ள (Instant Mehandi liquid in tamil) வேண்டும்.

மேலும் படிக்க: இனி நரைமுடிக்கு டை அடிக்காதீங்க..!! ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

Exit mobile version