உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

0
64
#image_title

உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

நாம் உணவில் சேர்த்து கொள்ளும் அனைத்து வகை கீரைகளிலும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை.இதில் இரும்புச் சத்து,வைட்டமின் ஏ,கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கீரையில் கூட்டு,கதையல் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை சாதம்.

தேவையான பொருட்கள்:-

*புளிச்சக்கீரை – 1 கட்டு

*வடித்த சாதம் – 2 கப்

*நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

*நெய் – 1 தேக்கரண்டி

*உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

*வேர்க்கடலை – 1 தேக்கரண்டி

*கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 4

*பச்சை மிளகாய் – 3

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*கறிவேப்பிலை – 1 கொத்து

*புளி – 1 எலுமிச்சை அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு கட்டு புளிச்சக்கீரை எடுத்து அதன் இலைகளை மட்டும் தனியாக கிள்ளி பாத்திரத்தில் போடவும்.பின்னர் அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.அடுத்து ஒரு பவுலில் சிறு துண்டு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி நல்லெணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடலை பருப்பு,1 தேக்கரண்டி உளுந்து பருப்பு,1/2 தேக்கரண்டி சீரகம்,1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் 3 பச்சை மிளகாய் மற்றும் 4 வர மிளகாய் சேர்த்து கலந்து விடவேண்டும்.அடுத்து
1/2 தேக்கரண்டி பெருங்காய தூள்,1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

அடுத்து சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள புளிச்சக்கீரையை சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.பிறகு ஊறவைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.கீரை நன்கு வெந்து வந்ததும் அதை மத்து அல்லது கரண்டி வைத்து மசித்து கொள்ளவும்.

அடுத்து 2 கப் வடித்த சாதம் சேர்த்து கிளறிக் விடவும்.கடைசியில் வாசனைக்காக சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.